National Geographic magazine and television channels are famous to provide rare information . we can't easily find more information about rare animals, but it is possible through http://animals.nationalgeographic.com/animals/.
This site provides a lot of information about the rare animals, and guide us in various categories like Animals Home, Facts, Photos, Video, Animal Conservation, and Big Cats Initiative. This site helps to school and college students to learn about the rare animals information.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விலங்குகள் குறித்து அறிய தகவல் தரும் இணைய தளம்
நேஷனல் ஜியாக்ரபிக் இதழும், தொலைக்காட்சி சேனல்களும், அவை தரும் அரிய தகவல்களுக்குப் பெயர் பெற்றவை. நாம் எளிதில் காண முடியாத பலவற்றைப் பற்றி தகவல்களைத் தரும் நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனம் விலங்குகள் குறித்து தகவல்களைத் தர http://animals.nationalgeographic.com/animals/என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தை இயக்குகிறது. நாம் இதுவரை கேள்விப்படாத விலங்குகள் குறித்தெல்லாம், மிக அருமையான தகவல்களை முழுமையாகத் தருகிறது. இந்த தளம் நம்மை வழி நடத்துவது மிக எளிமையாக உள்ளது. Animals Home, Facts, Photos, Video, Animal Conservation, and Big Cats Initiative எனப் பல பிரிவுகளில், தகவல்கள் கிடைக்கின்றன. மிகப் பெரிய அளவில், விலங்குகளின் பட்டியல் நீள்கிறது. இவை வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நாம் தேடும் விலங்கு, அல்லது தகவல் சார்ந்த விலங்கினைக் கண்டறிய முடியும். பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விலங்குகள் குறித்து அறிய மிகவும் அரிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த தளத்தினை அவசியம் காண வேண்டும்.
No comments
Post a Comment